Tuesday, 6 December 2016

துக்க கருப்பாய் நாடு ! துடிக்கிறது சோக நிலையில் வேதனையில் தவிக்கிறது பல கோடி தமிழர்களின் தாயக மூன்று எழுத்து மந்திரமாக ஓதப்பட்ட "அம்மா" என்ற புகழ் பெயருக்குஉரிவர் தன சகாப்தத்தின் இறுதி அத்தியாயத்தை முடித்த கொண்டுவிட்டார் கலைரசியாகவும்  புவியரசியாகவும்  கோலோட்சி புகழால் போற்றப்பட்ட மாதரசி மங்கையர் திலகமாக வைர ஒளி வீசும் தங்க தாரகையாகவே புகழ் வானில்பொன் நிலவாக ஒளி வீசுகிறார் புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் அவர்களின் அரசியல் வாரிசான புரட்சி தலைவி ஜெயலலிதா என்னும் மகத்தான அரசியல் ஆளுமை கொண்ட இரும்பு இதயம் இன்று ஓய்வு எடுத்து கொண்டது.

துணிச்சல் உறுதி விடாமுயற்சி இவற்றிக்கு சொந்தக்காரர் அஞ்சாமை அறிவுடைமை கொண்ட அன்னையே வீர வரலாறாய் வெற்றித்திருமகளை தமிழக மக்களின் மனங்களில் நீங்க இடம் பெற்றுவிட்ட தங்களுக்கு அடியானின் கண்ணீர் இத்யாஞ்சலி

                                                                                                              இப்படிக்கு
                                                                                                         உ நாராயணஸ்வாமி